ஸ்னேகா வீட்டு கல்யாணம்-நடிகைகள் டிமிக்கி!

By Staff

Sneha brother reception
சென்னையில் நடந்த நடிகை ஸ்னேகாவின் அண்ணன் பாலாஜி-ராதிகா திருமண வரவேற்புக்கு சக நடிகைகள் யாருமே வராமல் தவிர்த்து விட்டனர்.

ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் அழைத்திருந்தார் ஸ்னேகா.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், ஜெயம் ராஜா, ஆகிய முன்னணி இயக்குநர்களும், பிரபு, சுமன், ஜீவா, நரேன், ஜே.கே.ரித்தீஷ், ஜித்தன் ரமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ்கண்ணா, சின்னி ஜெயந்த், வையாபுரி, கஞ்சா கருப்பு போன்ற நடிகர்களும் வந்திருந்து வாழ்த்தினர்.

தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, செவன்த் சேனல் மாணிக்கம் நராயணன், எடிட்டர் மோகன் மற்றும் அச்சமுண்டு அச்சமுண்டு சீனிவாசன் ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆனால் அவரது சக நடிகைகள் ஒருவர் கூட வரவில்லை. இதனால் ஆண்கள் தலையாகவே காணப்பட்டது. பூர்ணிமா பாக்யராஜ், மஞ்சுளா விஜயகுமார், ப்ரீதா ஹரி மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் போன்ற முன்னாள் நடிகைகள் சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

ஸ்னேகா மீது நடிகைகளுக்கு அப்படியென கோபம் என்று தெரியவில்லை. ஒரு வேளை ஸ்னேகாவின் கல்யாணமாக இருந்திருந்தால் மொத்தமாக வந்து சந்தோஷமாக வாழ்த்தியிருப்பார்களோ?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X