வெற்றியாவது தோல்வியாவது... நடிச்சதுக்கு காசு கொடுத்தா சரி! - அனுஷ்கா அதிரடி

By Staff

Anushka
வேட்டைக்காரன் வெற்றியா தோல்வியா...?

இந்தக் கேள்வியை விஜய்யிடமோ, சன் குழுமத்திடமோ கேட்டிருந்தால், 'வரலாறு காணாத வெற்றி... கிடைச்ச வசூலை எண்ணக்கூட நேரமில்லை' என்று கூறியிருப்பார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே கேள்வியை படத்தின் நாயகி அனுஷ்காவிடம் கேட்டார்கள் சில நிருபர்கள்... அதற்கு அம்மணியின் பதிலைக் கேட்டு 'அப்படியே ஷாக் ஆகி'விட்டார்கள். வேட்டைக்காரன் குழு அந்த பதிலைக் கேட்காமல் போனார்களே என்ற குறைதான்...

அப்படி என்ன சொன்னார் அனுஷ்கா?

வேட்டைக்காரன் வெற்றியா தோல்வியா என்று இப்போது எதற்கு கேட்கிறீர்கள்... அதை படமெடுக்கும்போது யோசிக்க வேண்டும். இது வெற்றிப் படமாக வருமா... அதற்கேற்ப காட்சிகள் வைத்திருக்கிறோமா என்று அப்போது யோசிக்காமல், வெளியான பிறகு இது வெற்றிப் படமா தோல்விப்படமா என்று ஆராய்வது வீண் வேலை.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததுமே அதை நான் மறந்துவிட்டேன். வேறு வேலை, வேறு படங்கள் என பிஸியாகிவிட்டேன்.

பொதுவாகவே நான் ஒரு படம் நடித்து முடித்ததும் அந்தப் படத்தில் நடித்த ஹீரோ உள்பட அனைத்தையும் மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு தயாராகிவிடுவேன்... வெற்றியும் தோல்வியும் எனக்கு பொருட்டல்ல... நடித்ததற்கு சரியாக காசு கொடுத்தால் சரி.

அந்த வகையில் இப்போது நான் சிங்கம் என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இப்போது என் கவனமெல்லாம் இந்த ஒரு படத்தில் மட்டும்தான். சிங்கம் முடிந்ததும், அதையும் மறந்துவிடுவேன்" என்றார்.

என்ன ஒரு தொழில் அணுகுமுறை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X