தம்புராட்டி ஆகிறார் பானு!

தாமிரபரணி மூலம் நடிக்க வந்த பானு, அதன் பின்னர் கேரளாவிலேயே தங்கி விட்டார். அவருக்கும் அப்பாவுக்கும் தகராறு, கல்லூரிப் படிப்பு என செய்திகள் மட்டுமே பானுவைப் பற்றி வந்தன. ஆனால் அவர் மட்டும் கேரளாவிலிருந்து வரவேயில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அழகர் மலையில் நடித்திருந்தார் பானு. படம் நன்றாக ஓடுவதால் பானுக்கு மீண்டும் மார்க்கட் பிக்கப் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மலையாளத்தில் கிலாபத் என்ற படத்தில் நடிக்கிறார் பானு. வயதான ஒருவரை மணந்து கஷ்டப்படும் இளம் பெண் கேரக்டரில் நடிக்கிறாராம் பானு. அழகோடு, அவஸ்தைப்படும் தம்புராட்டி கேரக்டராம் இது.
இது ஒரு பீரியட் படம். வினு மோகன் என்பவர் பானுவுக்கு ஜோடி போடுகிறார். முதலில் பானு கேரக்டரில் மமதா மோகன்தாஸ்தான் நடிப்பதாக இருந்தது.. ஆனால் இந்திக்குப் போகவிருப்பதால் இந்தப் படத்தை தட்டிக் கழித்து விட்டார் மம்தா. இதனால் கிடைத்தது ஜாக்பாட் பானுவுக்கு.
இந்தப் படத்தின் மூலம் தனக்கு விருது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் பானு. அதே சந்தோஷத்தோடு விரைவில் புதிய தமிழ்ப் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











