பூ (மிகா) வுக்குள் பூகம்பம்!

பார்க்க மட்டும் மென்மையாக இல்லாமல், அதுபோன்ற கேரக்டர்களிலேயே நடித்து அனுபவப்பட்டவர் பூமிகா. ஆனால் கல்யாணமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பூமிகாவுக்குள் சின்ன மாற்றம்.
இனியும் காதல் கேரக்டர்களில் நடிப்பது சரியாக இருக்காது என்று நினைக்கும் அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். குறிப்பாக பயங்கரமான வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான ஆசையாக இருக்கிறது.
படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை விட பவர்புல்லான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இதனால் தன்னைத் தேடி கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம், அப்படிப்பட்ட பயங்கரமான வில்லத்தனமான கேரக்டர் இருந்தால் சொல்லுங்களேன், தூள் கிளப்பிடலாம் என்கிறாராம் பூமிகா.
வருபவர்களும் யோசித்துச் சொல்கிறோம் என்று கூறிச் செல்கிறார்களாம். இதுவரை எந்த வில்லத்தன கேரக்டரும் பூமிகாவைத் தேடி வரவில்லை என்ற போதிலும் அவரும் விடாமல் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறாராம்.
பூமிகாவுக்குள் இப்படி ஒரு 'பூகம்பமா'?


Click it and Unblock the Notifications