மீண்டும் சமந்தாவை இயக்கும் கவுதம் மேனன்!

By Chakra

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி வேடமானாலும் க்யூட்டாக செய்து பெயரைத் தட்டிச்சென்ற சமந்தாவை, மீண்டும் இயக்குகிறார் கவுதம் மேனன்.

சுமாரான நடிகையாக கருதப்படுபவர்களை தனது படங்களில் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து சூப்பர் ஹிட் நாயகிகளாக்குவதில் வல்லவர் கவுதம். உதாரணம் ரீமாசென், ஜோதிகா, சமீராரெட்டி...

ஜோதிகா பல படங்களில் நடித்த போதும், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அவருக்கு புதிய அந்தஸ்தைத் தந்தன. ரீமா சென்னை அறிமுகப்படுத்தியதே கவுதம் மேனன்தான்.

இப்போது சமீரா ரெட்டிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். இவர்கள் வரிசையில் இப்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் கௌரவ வேடத்திலும், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகவும் நடித்தவர் சமந்தா. இப்போது மீண்டும் அவரை தனது பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் கவுதம் மேனன். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் தொடங்குகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தமிழ்ப் பதிப்பில் சமந்தாவுக்கு சிறு வேடம் தரப்பட்டது. அப்போதே தமிழில் மெயின் ரோலில் வருவது போல ஒரு படத்தில் நடிக்க வைப்பதாக சமந்தாவுக்கு உறுதியளித்திருந்த கவுதம், இப்போது அதைக் காப்பாற்றியுள்ளார். இந்தப் படத்துக்கு இன்னும் நாயகன் யார் என்பது முடிவாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X