மகேஷ், சரண்யா மற்றும் பலர் 'லேட்'!

By Staff

Magesh Saranya Matrum Palar
கன மழை காரணமாக இன்று வெளியாகவிருந்த மகேஷ், சரண்யா மற்றும் பலர் படத்தின் ரிலீஸ் தாமதமாகியுள்ளது.

கூல் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 2வது படைப்புதான் மகேஷ், சரண்யா மற்றும் பலர்.

லிங்குச்சாமியின் முன்னாள் உதவியாளரான ரவி இயக்க, பி.வாசுவின் மகன் ஷக்தி நாயகனாக நடிக்க, அவருடன் ஜோடி போட்டிருக்கிறார் காதல் நாயகி சந்தியா.

கீர்த்தி சாவ்லா இப்படத்தில் 2வது நாயகியாக வந்து போயுள்ளார். படத்தை நேற்று திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார்.

இதற்கான பத்திரிக்கையாளர் காட்சிக்கும் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. படமும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப் போடப்பட்டு விட்டது.

படம் எப்போது திரைக்கு வரும் என்பதை கூல் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

கூல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X