இமாச்சல் பிரதேச மாநில பிராண்ட் அம்பாசடர் ஆனார் ப்ரீத்தி ஜிந்தா

இமாச்சல் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக்காக ப்ரீத்தி பாடுபடுவார். கடந்த சில காலமாக இதுகுறித்து ப்ரீத்தியுடன் பேசி வந்தது இமாச்சல் பிரதேச சுற்றுலாத்துறை. தற்போது பிராண்ட் அம்பாசடராக செயல்பட ப்ரீத்தி சம்மதித்துள்ளாராம்.
முன்னதாக மும்பையில், ப்ரீத்தியை இமாச்சல் பிரதேச சுற்றுலா மற்றும் சிவில் ஏவியேஷன் துறை இயக்குநர் அருண் சரச்மா, ஹம்ரிபூர் எம்.பி. அனுராக் தாக்கூர் ஆகியோர் சந்தித்துப் பேசி இதுகுறித்த பேச்சுக்களை இறுதி செய்தனர்.
விரைவில் ப்ரீத்தியை பிராண்ட் அம்பாசடராக நியமிக்கும் முடிவை இமாச்சல் பிரதேச அரசு முறைப்படி அறிவிக்கும்.
More from Filmibeat
இமாச்சல் பிரதேச அரசு பிராண்ட் அம்பாசடராகும் ப்ரீத்தி ஜிந்தா himachal pradesh govt preity zinta becomes hps brand ambassador


Click it and Unblock the Notifications











