கிரண் 'ஜல்சா' சரசு!

By Staff

Kiran
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜல்சா சரசு என்கிற பெயரில், பாலியல் தொழிலாளி வேடத்தில் நாளை நமதே படத்தில் நடிக்கிறார் கிரண்.

ஜெமினி மூலம் பிரேக் கண்ட கிரண், தொடர்ந்து ஹிட் ஆகி, ரசிகர்களை ஹீட் ஆக்குவார் என்று பார்த்தால், படு வேகமாக சுருண்டு போனார். தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லாமல் போன கிரணுக்கு தற்போது நாளை நமதே மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

காசி, மன் மன வானில், அற்புத தீவு ஆகிய படங்களைக் கொடுத்த மலையாளத்து வினயன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கிரண் ஜல்சா சரசு என்கிற பெயரில் விபச்சாரப் பெண் வேடத்தில் வருகிறார்.

இந்தக் கேரக்டர் என்பதால் கிளாமரும், காமமும் தூக்கலாக இருக்கும் என நினைக்காதீர்கள். மிகவும் அருமையான கேரக்டர் இது. சிறப்பாக வந்திருக்கிரது, எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்கிறார் மிகையான லிப்ஸ்டிக்குடன் காணப்பட்ட கிரண், சிரித்தபடி.

தனது கேரக்டர் குறித்து கிரண் கூறுகையில், நான் விபச்சாரப் பெண்ணாக நடித்தாலும், என்னை நம்பியுள்ள அனாதைக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவே அந்த தொழிலை விரும்பிச் செய்யும் பெண்ணாக வருகிறேன்.

மற்றவர்கள் வாழ தனது நலன்களை விட்டுத் தரும் குணாதியசம் கொண்ட பெண்தான் சரசு. இதை ஆபாசமான, கவர்ச்சிகரமான கேரக்டராக நான் பார்க்கவில்லை. ரசிகர்களுக்கும் அப்படித் தெரியாது என்றார் கிரண்.

கிரண் இப்போது சரத்குமாரின் ஜக்குபாய் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதில் பப் டான்ஸராக வருகிறாராம். இது சிறப்புத் தோற்றம் என்றாலும் சரத்குமாருடன் அதில் தோன்றுகிறாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கோலிவுட்டில் கிரண் காற்று வீசத் தொடங்கியிருப்பது அவரது கையில் இருக்கும் படங்களைப் பார்த்தால் தெரிகிறது. வாடா, ராஜாதி ராஜா ஆகிய படங்களிலும் பங்களித்து வருகிறார் கிரண்.

இன்னொரு விஷயம், கிரண் இப்போது மிகக் கடுமையாக உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறாராம். அதாவது வெறும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிடுகிறாராம். இதனால் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் கிரண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X