ஹே குஜ்ஜூ... லட்சுமிராய்!

பெல்காம் அழகி லட்சுமிராயின் நீண்ட நாள் கனவு ஒருவழியாக நிறைவேறிவிட்டது!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென் மொழிப் படங்களில் திறமை காட்டி வந்த லட்சுமிராய்க்கு, எப்படியாவது பாலிவுட்டில் கால்பதித்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை.
இதற்காக கடந்த 4 மாதங்களாக அவர் கடும் முயற்சி செய்து வந்தார். இந்திப் படம் ஒன்றில் அவர் நடிக்கப் போவதாக கடந்த மாதமே செய்தி வெளியானது. ஆனாலும் லட்சுமி ராய் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாகக் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
இப்போது சதீஷ் கவுசிக் இயக்கத்தில் ஹே குஜ்ஜூ எனும் இந்திப் படத்தில் ஹிமேஷ் ரேஷம்மியாவுக்கு ஜோடியாக இரண்டு பாடல் காட்சிகளில் நடித்து முடித்த பிறகு, தன் பாலிவுட் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து லட்சுமி ராய் கூறுகையில்,
கடந்த 6 வருடங்களாக பல படங்களில் நடித்தாலும், இப்போதுதான் என்னை ஒரு முழுமையான நடிகையாக உணர முடிந்தது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. என் முதல்படமே பிரமாண்டமாய் அமைந்ததில் சந்தோஷம்.
இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கக் காரணம் என்னுடைய தோற்றம் பஞ்சாபிப் பெண்களைப் போல இருப்பதுதான். இந்தப் படத்திலும் நான் பஞ்சாபிப் பெண்ணாகத்தான் நடிக்கிறேன்.
அதே நேரம், இந்திப் படங்களில் வாய்ப்பு கிடைப்பதால், தென் மாநில மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல. எனக்கு தென்மாநில மொழிப் படங்கள்தான் முக்கியம். அனைத்து மொழிகளிலும் கலக்குவதே என் லட்சியம் என்கிறார் லட்சுமி ராய்.
கலக்குங்க, யார் வேணாம்னு தடுக்கப் போறாங்க!


Click it and Unblock the Notifications











