லாராவை 'காலி' செய்த தபு!

மலையாளத்து கத பறயும்போல் தமிழிலும், தெலுங்கிலும், ரஜினி நடிக்க ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை இந்தியில், பில்லூ பார்பர் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
நாயகனாக நடிப்பவர் ஷாரூக்கான். அவரது நண்பர் - முடி திருத்தும் கலைஞராக வருபவர் இர்பான்.
கதைப்படி முடி திருத்தும் தொழிலாளியின் மனைவியாக வருகிறார் லாரா. கிராமம் சார்ந்த கதை என்பதால், கிராமத்துப் பெண்ணாக லாரா வரவேண்டும்.
புடவை கட்டி சில காட்சிகளில் அவரா நடிக்க வைத்துப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன். ஆனால் புடவையையும் தாண்டி லாராவின் கவர்ச்சி தூக்கலாகத் தெரிய, வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என லாராவைத் தூக்கிவிட்டு தபுவை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர்.
தன்னிடம் உள்ள ஒரே ஆயுதம் கவர்ச்சிதான். அதுவும் இந்தப் படத்துக்கு மைனஸாகப் போய்விட்டதே என்ற கவலையில் மூழ்கியுள்ளாராம் லாரா.


Click it and Unblock the Notifications











