மேடி-வித்யா, செம கெமிஸ்ட்ரி!

By Staff

Vidya Balan with Madhavan
மாதவனுக்கும், வித்யா பாலனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. இருவரும் சேர்ந்து குரு படத்தில் நடித்த பின்னர் இப்போது ஜோடி போட்டு விளம்பரங்களிலும் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தியில் பிசியாக உள்ள வித்யா பாலன் கமல்ஹாசன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். பின்னர் மாதவனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்தார். இப்படி தமிழில் வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த வித்யா, தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான மாதவனுடன் இணைந்து வேகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

இருவரும் இணைந்து மணிரத்தினத்தின் குரு படத்தில் நடித்தனர். அது முதலே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதேபோல இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரம், கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது என்று பாலிவுட்டில் பேச்சு கிளம்பியது.

இதை உறுதிப்படுத்துவது போல இருவரும் தற்போது அடிக்கடி ஜோடி சேர்ந்து காணப்படுகின்றனர் - விளம்பரப் படங்களில் நடிப்பதற்காக. இருவரும் சேர்ந்து நடித்த ஏர் டெல் விளம்பரம் அகில இந்தியா முழுவதும் படு பாப்புலர் ஆகியுள்ளது. விளம்பரம் போல இல்லாமல் வெகு இயல்பாக இருப்பதாகவும், மாதவன் - வித்யா ஜோடிப் பொருத்தம் சிறப்பாக உள்ளதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

இதையடுத்து மேடி - வித்யா ஜோடியை வைத்து மேலும் 3 விளம்பரங்களை எடுக்க தீர்மானித்தது ஏர் டெல் நிறுவனம். இருவரும் உடனடியாக ஒ.கே. சொல்லி விட்டனர். இதையடுத்து முதல் விளம்பரப் படம் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மும்பையில் தங்கியுள்ளாராம் மாதவன்.

இன்னொரு பக்கம் மாதவனையும், வித்யா பாலனையும் வைத்து படம் எடுக்க இந்தித் தயாரிப்பாளர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறதாம். எல்லாம் குருவால் கிடைத்த பெயர்தான் காரணம். இருவரையும் சில தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளனராம். இருவரும் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X