நயன்தாராவை விட எனக்கு வயசு அதிகமில்லை-கூறுகிறார் மனீஷா கொய்ராலா

By Sudha

நயன்தாராவுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமில்லை. ஆனாலும் கேரக்டரின் முக்கியத்துவம் கருதியே அவருக்கு அம்மாவாக நடித்தேன், என்றார் நடிகை மனீஷா கொய்ராலா.

இந்தியில் பரபரப்பான நாயகியாக இருந்தவர் மனீஷா. தமிழில் பம்பாய் படத்தில் அறிமுகமாகி, ஷங்கரின் இந்தியன், ரஜினியின் பாபா உள்ளிட்ட பெரிய படங்களில் நாயகியாக நடித்தார்.

கடந்த ஆண்டு நேபாள தொழிலதிபரை மணந்த அவர், இப்போது தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். வழக்கம்போல அம்மா, மாமியார் வேடங்களை ஒப்புக் கொள்ளத் துவங்கியுள்ளார்.

மலையாளத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாகவும், மாப்பிள்ளையில் தனுஷுக்கு மாமியாராகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து மனீஷா கூறுகையில், "நயன்தாராவின் அம்மா வேடத்தில் நடிக்க அழைத்தபோது முதலில் யோசித்தேன். எனக்கும் நயன்தாராவுக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. ஆனாலும் படத்தில் எனக்கு அழுத்தமான வேடம். என்னைச் சுற்றியே கதை வரும். எனவேதான் சம்மதித்தேன்.

எனது 20-வது வயதில் பம்பாய் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவே நடித்திருக்கிறேன். எனவே இது ஒரு பெரிய விஷயமில்லை.

நயன்தாராவைப் பொறுத்தவரை பழக இனிமையானவர். அவருக்கு தாயாக நடித்தது தவறல்ல.

மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடித்ததும் மறக்க முடியாதது...," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X