'திகில்' மீரா!

இயக்குநர் ஷங்கர் இப்போது வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட. அவரது தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
தற்போது ரோபோ படத்தில் பிசியாக இருக்கும் ஷங்கர், சைடில் திகில் படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை இயக்கவிருப்பவர் நாகா. இவர் திகில் டிவி தொடர்களை இயக்குவதில் இவர் மன்னர். கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான நாகா இப்போது திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.
ஷங்கரின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றை நாகா இயக்குகிறார். இந்தப் படமும் அவருக்கு கை வந்த கலையான திகில் கதைதான்.
நாயகியாக மீரா ஜாஸ்மினை புக் செய்துள்ளனர். ஹீரோ உள்ளிட்ட விவரங்களை இறுதி செய்து கொண்டுள்ளனர்.
வித்தியாசமான கதையமைப்புடன் பெரிய திரையையும் பயமுறுத்தப் போகிறேன் என்கிறார் நாகா.
இப்பவே பயந்து வருதே!
Comments


Click it and Unblock the Notifications