ராஜசேகரின் தங்கையானார் மீரா

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த படம் அண்ணா தங்கி. இப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. உடனடியாக இந்தப் படத்தை தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் - மீரா ஜாஸ்மின் நடிக்க கோரின்டாகு என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.
அண்ணனாக ராஜசேகரும், தங்கச்சியாக மீரா ஜாஸ்மினும் நடித்தனர். மீராவுக்கு ஜோடி போட்டவர் ஜெய் ஆகாஷ். இப்படத்தை இப்போது தமிழுக்கு டப் செய்கின்றனராம்.
மருதாணி என பெயரிட்டுள்ள இப்படத்தில் தமிழ் வாசனைக்காக சில காட்சிகளை புதிதாக படம் பிடிக்கவுள்ளனர்.
டிவி காமெடி புகழ் ஆர்த்தி, மயில்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இணைக்கின்றனர். இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
ராஜ்குமார் இசையில் தமிழில் படம் வந்து வெகு நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருதாணியை தீபாவளிக்குப் பின்னர் ரசிகர்களுக்கு இடத் திட்டமிட்டுள்ளனராம்.
Comments
anna tangi அண்ணா தங்கி டப்பிங் டாக்டர் ராஜசேசகர் மருதாணி மீரா ஜாஸ்மின் dr rajasekhar dubbing maruthani meera jasmine


Click it and Unblock the Notifications