ஜெனிலியாவுக்கு தடை- நடிகர் சங்கம் அதிரடி!!

ஒரு வாரத்துக்குள் உடனடியாக உறுப்பினராகாவிட்டால் அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக பதில் அளிக்குமாறு ஜெனிலியாவுக்கு நடிகர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பாய்ஸ் படத்தில் ஹரிணி எனும் பெயரில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜெனிலியா. கோவாவைச் சேர்ந்த இவர் தற்போது தெலுங்கு, இந்திப் படங்களிலும் பிஸியான நடிகையாக உள்ளார்.
ஆரம்பத்தில் வெளியான இவரது தமிழ்ப் படங்கள் எதுவும் சரியாக ஓடாததால், ராசியில்லா நடிகையாகப் பார்க்கப்பட்டார்.
ஆனால் சமீபத்தில் இவர் நடித்து வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஜெனிலியாவின் மார்க்கெட்டை தமிழில் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் உள்ள நடிகர் நடிகைகளின் பட்டியலை நேற்று வெளியிட்டனர் சங்க நிர்வாகிகள்.
இதில் நட்சத்திர நடிகையான ஜெனிலியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், சென்னை-28 படத்தில் நடித்த யாரும் இன்னமும் சங்கத்தில் உறுப்பினராக இல்லை.
சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இனி தரப்பட மாட்டாது என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் உறுப்பினராகாவிட்டால், அவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











