இந்திக்கு போகும் நமீதா!

சூரத்திலிருந்து தெலுங்கு வழியாக தமிழுக்கு வந்தவர்தான் நமீதா. தெலுங்கில் ஆரம்பத்தில் நமீதாவின் சிறப்பு சரிவர கவனிக்கப்படாமல் போயிற்று. ஆனால் கோலிவுட், நமீதாவின் திறமைகளை டக்கென புரிந்து கொண்டு அடுத்தடுத்து வாய்ப்புளைக் கொடுத்து அவரை கிளாமர் நாயகியாக வார்த்தெடுத்தது.
கவர்ச்சிகரமாகவே நடித்து வரும் நமீதா தமிழ், தெலுங்கு தவிர கன்னடத்திலும் நடித்து அந்த ஊர் ரசிகர்களையும் இம்சித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு படத்தில் தலை காட்டியுள்ளார்.
இந்த நிைலயில், இந்தியிலும் தனது அலையைப் பரப்ப விரும்புகிறாராம் நமீதா. இதற்கு முதல் படியாக மும்பையில் ஒரு பிளாட் வாங்கப் போகிறார். அதன் பின்னர் அங்கு தங்கி இந்தி வாய்ப்புகளைப் பிடிக்கப் போகிறாராம்.
தெற்கத்தி நடிகைகளான ஆசின், நயனதாரா போன்றோரே இந்தியில் கலக்கப் போகும்போது அங்கிருந்து வந்த நாம் சும்மா இருக்கலாமா என்ற எண்ணத்தின் விளைவுதான் இந்த இந்தி ஆசையாம்.
ஏகப்பட்ட கிளாமர் நடிகைகளால் பாலிவுட் ஏற்கனவே 'பாய்ல்' ஆகிக் கிடக்கிறது. இதில் நமீதாவும் இணைந்தால் பாலிவுட் என்ன ஆகுமோ?


Click it and Unblock the Notifications











