நவ்யாவின் ஆட்டோகிராப்-2

பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து தயாரிக்கும் திட்டத்திலிருக்கிறார் சேரன்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கோபிகாவை அணுகினார் சேரன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளப் போவதால் கால்ஷீட் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டாராம்.
முதல் பாகத்தில் நடித்திருந்த கனிகாவும் திருமணமாகி கணவர் குடும்பம் என செட்டிலாகிவிட்டதால், அவரிடமும் கால்ஷீட் கேட்க முடியாமல் போய்விட்டது.
கடைசியாக தனக்கு மிகவும் விருப்பமான நாயகியான நவ்யாவை அணுகினார். நவ்யாவுக்கும் மலையாளத்தில் பெரிய வாய்ப்புகள் எதுவுமில்லை. தமிழில் ரசிக்கும் சீமானே, அவள் பெயர் தமிழரசி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பதால் உடனே கால்ஷீட் கொடுத்துவிட்டார்.
ராமன் தேடிய சீதை படத்திலும் சேரனும், நவ்யாவும் இணைந்து நடித்து வருகின்றனர். ஏற்கனவே இருவரும் மாயக்கண்ணாடியில் இணைந்தனர். அதற்கு முன்பு ஆடும் கூத்து படத்திலும் சேர்ந்து நடித்தனர். இப்போது ஆட்டோகிராப் 2ம் பாகத்திலும் இணையவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











