இளைஞர்களைத் 'துரத்தும்' நயன்!

விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் அதிரடிப் படம் சத்யம். நயன்தாரா இதில் அவருக்கு ஜோடி.
இந்தப் படத்தில் தன்னிடம் குறும்பு செய்ய முற்படும் எட்டு இளைஞர்களைத் துரத்தித் துரத்தி பழிவாங்கும் வேடமாம் நயனுக்கு.
நகைச்சுவைக்கு நகைச்சுவை, பெண்களிடம் குறும்பு செய்யக் கூடாது என்ற செய்தி என ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் முயற்சிதான் நயன்தாராவின் ரோல். அதை அவர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார், என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராஜசேகர்.
இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஜாக்கெட் இல்லாமல் நடித்துள்ளாராம் நயனதாரா. சமீப காலமாக முன்னணி நாயகிகள் ஜாக்கெட் போடாமல் நடிப்பதில்லை. அந்த 'வறட்சியை' தற்போது போக்கியுள்ளார் நயன்.
சத்யம் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 15ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











