சூர்யாவுக்கு ஜோடி நயன்தாரா!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதுப் படத்துக்காகத்தான் இந்த புதிய காம்பினேஷன். இப்போது ஜக்குபாய் படத்தில் பிஸியாக இருக்கும் கேஎஸ் ரவிக்குமார், அந்தப் படம் முடிந்ததும் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்குகிறார் (விக்ரமை வைத்துப் பண்றதா சொன்ன படம் என்னாச்சுங்கோ!).
இந்தப் படத்தின் நாயகி வேடத்துக்கு நயன்தாராவை அணுகியுள்ளார் ரவிக்குமார். கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்துள்ளாராம் நயன்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்குள் சூர்யாவும் அயன் படத்தை முடித்துவிட்டு, அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி விடுவார்.
நயன்தாரா சம்பளம், கால்ஷீட்டெல்லாம் சரியா பேசி முடிவு பண்ணிட்டீங்களா ரவிக்குமார் சார்..!
Comments


Click it and Unblock the Notifications