நிஷாவாய் வந்த அமோஹா!

By Staff

Nisha Kothari
அமோகமாக வரவேண்டும் என்ற ஆசையில் அமோஹா என்ற பெயர் சூட்டிக் கொண்டு ஜே.ஜே. படத்தில் திறமை காட்டினாரே... ஒரு டெல்லி அழகி, நினைவிருக்கிறதா?

தமிழ் கைவிட்ட கடுப்பில் மும்பைக்குப் போனவரின் மீது ராம் கோபால் வர்மாவின் பார்வை விழ, அவரது ஆஸ்தான நடிகை ஆனார். பல படங்களில் ஒரிஜினல் பெயரான நிஷா கோத்தாரி என்ற பெயரிலேயே நடிக்க வைத்துப் பார்த்தார்.

ஆனால், தேறவில்லை நிஷா. இதையடுத்து அப்படியே தெலுங்குக்கு வந்தார். பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் நடித்தார். பெயர் ஒக்க மக்கடு.

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் இதுவரை பாலகிருஷ்ணாவுக்கு இப்படி ஒரு தோல்வி கிடைத்ததில்லை என்று சொல்லுமளவுக்கு, படுதோல்வியடைந்தது அந்தப் படம். ஆனாலும் அம்மணிக்கு அடுத்த வாய்ப்பும் கிடைத்தது, ஹரி ஓம் படத்தில். இது சின்ன பட்ஜெட் படம்.

இனி தெலுங்கு வேலைக்காகாது எனப் புரிந்து கொண்ட நிஷா, மீண்டும் இந்தியில் நுழைந்து கவர்ச்சியில் களேரம் செய்து வருகிறார், பெரும்பாலும் ராம் கோபாலின் படங்களில்...

இந் நிலையில் கோலிவுட் பக்கமாய் கதவைத் தட்டிப் பார்த்தால் நிஷா, அவரது நல்ல நேரம் உடனே திறந்து கொண்டது கதவு. கைமேல் பலனாக இரு பட வாய்ப்புகளும் கிடைக்க, இப்போது தி.நகர் பக்கம் ஏதாவது வீடு வாடகைக்குக் கிடைக்குமா என தேடிக்கொண்டிருக்கிறார் நிஷா.

தயாரிப்பாளர் அடி வயிற்றில் கைவைத்து விட்டார் என அலறிக்கொண்டு ஓடினாரே மாளவிகா, அதே கார்த்திகை படத்தில், மாளவிகாவுக்குப் பதில் நடிக்கப் போகிறவர் இந்த நிஷா கோத்தாரிதானாம் (அது சரி... இந்தப் படத்தில் நமீதா நடிப்பதாகச் சொன்னாரே இயக்குநர், என்னாச்சு? அவருக்கும் அதே பிரச்சினையோ!!).

இதைத் தவிர விஜய் நடிக்கும் வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம்.

செகன்ட் இன்னிங்ஸ் வெயிட்டா இருக்கும் போலிருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X