சேரனுடன்? சேச்சே - நவ்யா!

வடிவான நடிகைகளில் நவ்யாவும் ஒருவர். அவ்வப்போது வந்தாலும், அழகாக நடித்து விட்டுப் போகும் அற்புத நடிகை நவ்யா. இடையில் சேரனையும், இவரையும் இணைத்து ஒரு கதை ஓடியது. அதை சேரன் சமீபத்தில்தான் மறுத்தார். இப்போது நவ்யாவும் அப்படிெயல்லாம் எதுவும் இல்ைல என்று கூறியிருக்கிறார்.
என்னை வைத்து இதுவரை மலையாளத்தில் ஒரு முறை கூட வதந்தியோ, கிசுகிசுவோ வந்ததில்லை. தமிழில்தான் இப்படி கூறி வருகின்றனர். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
நான் ரொம்ப அமைதியான பெண். யாருடனும் அவ்வளவு சீக்கிரம் பழகவே மாட்டேன். யாரிடம் எவ்வளவு பேசணுமோ, அவ்வளவுதான் பேசுவேன். அதேபோலத்தான் ஒரு இயக்குநர் என்ற முறையில் சேரனுடன் எப்படிப் பழக வேண்டுமோ அப்படிப் பழகினேன், ேபசினேன்.
மாயக்கண்ணாடியில் நடித்தேன். இப்போது ராமன் தேடிய சீதையில் சேரனுடன் இணைந்து நடிக்கிறேன். இதை வைத்து இணைத்துப் பேசி வருகின்றனர்.
சேரன் சார் ரொம்ப நல்லவர். இயல்பாக, எதார்த்தமாக பழகுவார். அவரிடம் பந்தா கிடையாது.
இப்படிப்பட்ட வதந்திகளை நான் பொதுவாக பெரிதுபடுத்துவதில்லை. சேரனையும் என்னையும் இணைத்து வரும் வதந்திகளையும் நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் நவ்யா நாயர்.
நவ்யாவுக்கு இப்போது புது பிரண்டு கிடைத்துள்ளாராம். அவர் ஆண் அல்ல, பெண். நம்ம பிரியா மணிதான் அந்த புது பிரண்ட். இருவரும் படு நெருக்கமாகி விட்டார்களாம்.
நம்புறோம் நாயரே!


Click it and Unblock the Notifications











