'பூ' பார்வதி!

By Staff

Parvathy and Srikanth
அச்சு அசல் நெல்லைக்கார பொண்ணாக பூ படத்தில் வாழ்ந்திருக்கிறார் கேரளத்து பார்வதி.

மோசர் பெயர் நிறுவனத்தின் தயாரிப்புதான் பூ. ஸ்ரீகாந்த் நடித்துள்ள இப்படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசி இயக்கியுள்ளார்.

இப்படத்தில்தான் கேரளத்து பார்வதி நடித்து அறிமுகமாகியுள்ளார். மாரி (மாரியம்மாள்) என்ற கேரக்டரில் கலக்கலா நடித்துள்ளார் பார்வதி.

அச்சு அசல் நெல்லைக்காரப் பொண்ணாக பார்வதி மிரட்டியுள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டித் தள்ளுகிறார்கள். படத்தில் பார்வதி நடிக்கவே இல்லை, மாறாக நெல்லை சீமைப் பொண்ணாகவே மாறி விட்டார் என்றும் பாராட்டுக்கள் குவிகின்றன.

முக பாவனைகள், நடிப்பு, பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்து ஏரியாக்களிலும் பார்வதி கலக்கியுள்ளார் என்பது இன்னொரு பாராட்டு.

பார்வதி போன்ற புதுமுகம், அதுவும் மலையாளத்து பெண்து இப்படி தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண்ட கதையில் இவ்வளவு அருமையாக நடிக்க முடிந்தது மிகப் பெரிய சாதனை என்று திரையுலகிலும் ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

பார்வதி நடிக்க வருவதற்கு முன்பு கிரண் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். பின்னர் மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். கன்னடப் படங்கள் சிலவற்றிலும் கூட தலை காட்டியுள்ளார்.

சென்னை போர் பிரேம்ஸ் தியேட்டரில் பூ படத்தின் பிரஸ் ஷோவுக்குப் பின்னர் நம்மிடம் பார்வதி பேசுகையில், என்னை தங்களில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு எனது முதல் நன்றி. தலை வணங்கி அவர்களின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

நல்ல ரசிப்புத்தன்மை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள்தான். திறமைக்கு எந்த அளவுகோலும் இல்லை என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்து விட்டனர்.

சசி அருமையான, திறமையான இயக்குநர். இப்படத்துக்காக கடுமையாக உழைத்தார். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.

அவசரப்பட்டு கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் ஏற்கும் மன நிலையில் நான் தற்போது இல்லை. நல்ல கதைகளாக இருந்தால்தான் ஒப்புக் கொள்வது குறித்து முடிவெடுப்பேன். நல்ல கதையுடன் கூடிய படம்தான் எனக்கு முக்கியம், சம்பளம் முக்கியமல்ல என்கிறார் பார்வதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X