பியூலா பத்திரமாக இருக்கிறார்-போலீஸுக்கு ஆசின் கடிதம்

By Staff

Asin
வேலைக்காரப் பெண் பியூலா என்னுடன் பத்திரமாக இருக்கிறார். கஜினி இந்திப் பட ஷூட்டிங் முடிந்ததும் நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று கூறி நடிகை ஆசின், சென்னை போலீஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆசினின் சென்னை சேத்துப்பட்டு வீட்டில் வேலை பார்த்து வருபவர் பியூலா. இவரது தாயார் நரசம்மா என்பவர் மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், மும்பைக்கு அவரை ஆசின் கூட்டிச் சென்று விட்டார் எனவும், அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் நரசம்மா கூறுகையில், எனது மகளை விபச்சார விடுதியில் விற்றிருக்கலாமோ என்று சந்தேகப்படுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தொலைபேசி மூலம் மும்பையில் உள்ள ஆசினிடம் போலீஸார் பேசினர். அப்போது அவர், பியூலா தன்னுடன்தான் இருப்பதாகவும், அவர் நலமுடனும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். பியூலாவும் போலீஸாருடன் பேசி, தான் நன்றாகவும், பத்திரமாகவும் இருப்பதாகவும், தனது தாயார் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆசின் தனது மகளை மிரட்டுவதாக நரசம்மா மீண்டும் போலீஸாரிடம் கூறியதால், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸார் யோசித்தனர்.

இதையடுத்து ஆசினை நேரில் வரவழைத்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. விசாரணைக்கு வருமாறு ஆசினுக்கும் தகவல் தரப்பட்டது.

இந்த நிலையில், தனது வக்கீல் வெங்கடேசன் மூலம் ஆசின் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் பியூலா என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறார். யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன்.

நான் நடித்து வரும் இந்தி கஜினி' படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, நான் தற்போது போலீஸ் விசாரணைக்கு வர இயலாத நிலையில் உள்ளேன்.

சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். அதன் பிறகு, பியூலாவை அழைத்துக் கொண்டு சென்னை வருவேன். தங்களிடம் நேரில் வந்து தகுந்த விளக்கம் அளிப்பேன் என்றும் ஆசின் கூறியுள்ளார்.

அதே கடிதத்துடன் பியூலாவின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், தான் பத்திரமாக இருப்ப தாகவும், ஆசின் தனக்கு உரிய சம்பளம் கொடுத்து நன்றாக வைத்திருப்பதாகவும் விரைவில் சென்னை திரும்பி வருவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஆசின் மீது எந்த வழக்கையும் தொடர வேண்டாம் என தனது தாயாருக்கும் பியூலா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து ஆசின் வரும் வரை பொறுத்திருக்க போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X