பிரபு தேவா படத்தில் பூனம் கவுர்!
நெஞ்சிருக்கும் வரை படத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாபி மாடல் பூனம் கவுரை நினைவிருக்கிறதா..
தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கில் கொஞ்ச காலம் காலம் தள்ளியவருக்கு தம்பிக் கோட்டை மற்றும் பயணம் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது.
இடையில் மலையாளத்தில் அவருக்கு வந்த பெரிய வாய்ப்பு பறிபோனது. இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து ஒரு பெரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
அது விஷாலை வைத்து பிரபுதேவா இயக்கி வரும் படத்தில் இரண்டாவது நாயகி வேடம். கதைப்படி முதல் நாயகி சமீரா ரெட்டிக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வேடமாம் இது.
இந்த வாய்ப்பு குறித்து பூனம் கூறுகையில், இந்த முறை தமிழ் சினிமா என்னை ஏமாற்றாது என நம்புகிறேன். இந்தப் படத்தில் ரொம்ப ஸ்பெஷல் ரோல் எனக்கு. இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்படும் பிரபு தேவா இயக்கத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது, என்றார்.


Click it and Unblock the Notifications











