நயன்தாராவாக விருப்பமில்லை!-பூர்ணா

முனியாண்டி படத்தின் பாடல் வெளியீட்டின் போது, பூர்ணாதான் அடுத்த ஆசின் என்று விஜய் வாயால் பாராட்டுப் பெற்றவர் பூர்ணா.
பூர்ணாவுக்கும் சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர். மலையாளத்தில் திலீப்புடன் ஒரு படம், மோகன்லாலுடன் மூன்று படங்கள் நடித்துள்ளார். இப்போது பாசில் டைரக்ஷனில் ஒரு புதிய மலையாள படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழில் இவர் நடித்த முதல் படம், 'கொடைக்கானல்.' ஆனால் முதலில் திரைக்கு வந்த படம், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு.
அடுத்து மணிரத்னம் உதவியாளர் சுஜா டைரக்ஷனிலும் ஒரு படம் பேச்சு வார்த்தையில் இருக்கிறதாம்.
கன்னடத்தில், ஜோஸ் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இன்னும் தெலுங்குக்குப் போகவேண்டியதுதான் பாக்கி.
ஏற்கெனவே தமிழில் கேரள நாயகிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களில் யாரைப் போல நடித்துப் புகழ்பெற விருப்பம் என்று கேட்டால், தயங்காமல் பதில் வருகிறது பூர்ணாவிடமிருந்து.
நயன்தாரா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவரது பாதை வேறு. எனக்கு அசின் பாதையில் செல்லவே விருப்பம். ரேவதி, சுஹாசினி, கோபிகா, தேவயானி ஆகியோரைப் போல் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ்பெற விரும்புகிறேன்...' என்கிறார் பூர்ணா.
குடும்பப் பாங்கினி!


Click it and Unblock the Notifications











