பிரகாஷ்ராஜுக்கு பூமிகா

நடக்கப் போவது இங்கல்ல, தெலுங்கில். மிக நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். அவர் நடித்த முதல் ஹீரோ படம் தயா. அவரே தயாரித்து ஹீரோவாக நடித்த படம் அது.
அதன் பின்னர் ஹீரோ வேலையை விட்டு விட்டு வில்லன், குணச்சித்திரம் என்று பிசியாகி விட்டார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்குப் படம் மூலம் மீண்டும் ஹீரோவாகியுள்ளார் பிரகாஷ் ராஜ். தேசிய விருது கிடைத்த பின்னர் புக் ஆன படமாம் இது. படப்பிடிப்பும் உடனடியாக தொடங்கி விட்டது. இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் பூமிகா.
திருமணமான பின்னர் பிரேக் இல்லாமல் தவித்து வரும் பூமிகா, தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளையெல்லாம் ஒத்துக் கொள்கிறார். அந்த வகையில் பிரகாஷ் ராஜுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றுள்ளார்.
ஏற்கனவே பூமிகாவின் படங்களில் வில்லனாக நடித்தவர் பிரகாஷ் ராஜ். தற்போது முதல் முறையாக ஜோடி போடுகிறார்.
தமிழில் தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் படத்திலும் பிரகாஷ் ராஜ், பூமிகா, பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











