பிருத்விராஜ் மீது காதல் இல்லை-பிரியாமணி

உடன் நடிக்கும் நடிகைகளை வளைத்து போடுவதில் நம்பர்-1 ஆக இருக்கும் பிருத்விராஜூக்கும், பிரியாமணிக்கும் இடையே நினைத்தாலே இனிக்கும் படப்படிப்பின் போது கசக்காத காதல் அரும்பியதாக கோலிவுட்டில் தகவல்கள் கசிந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இருவரும் ஜோடியாக வந்தனர்.
இது குறித்து பிரியாமணியிடம் கேட்ட போது,
நாங்கள் நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முன் மலையாளத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம். எங்களுக்கு இடையே 5 ஆண்டுகளாக நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. ஒரு நண்பரோடு படங்களில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
படத்தின் போது கொடுத்த வசனத்தை மட்டுமே பேசக்கூடாது, உணர்வுகளையும் கொட்ட வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் அறிவுரை வழங்கியுள்ளார். அதை மனதில் நன்றாக பதிய வைத்துள்ளேன்.
அவரது ராவணன் படத்தில் எனக்கு சூர்ப்பனகை வேடமா? என பலரும் கேட்கிறார்கள். எனது கேரக்டர் பற்றி வெளியே சொல்ல முடியாது. ஆனால் அது சிறப்பான கேரக்டர்.
உணர்வு பூர்வமாக நடிப்பதாக பலரும் என்னை பாராட்டுகிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே நடிக்கத் ஆரம்பித்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்னரும் ஏதேனும் ஒரு சீனை கற்பனை செய்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். அந்த பயிற்சி என்னை சிறந்த நடிகையாக்கி இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











