'புலி'யில் ஸ்ரேயாவின் ஐட்டம் டான்ஸ்!

By Staff

Shriya
மீண்டும் ஐட்டம் டான்ஸுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா.

முன்பு கேரியரின் உச்சத்தில் இருந்தபோது, வடிவேலுவின் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார் ஸ்ரேயா. இதனால் கடுப்பான அஜீத், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

காமெடியனுடன் ஒற்றைப் பாடலுக்கு ஆடும் நடிகையை என் படத்தில் போட மாட்டேன் என வெளிப்படையாகக் கூறிவிட்டு நயனுடன் ஜோடி போட்டார்.

அதன்பிறகு அவருக்கு வரவிருந்த சில நல்ல வாய்ப்புகளும் கூட நழுவிப் போனது தெரிந்திருக்கும்.

இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸுக்கு ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ரேயா. அது பவன் கல்யாண் நடிக்க, எஸ் ஜே சூர்யா இயக்கும் புலி. இப்போது தெலுங்கில் தயாராகிவரும் புலி படம், தமிழில் எஸ்ஜே சூர்யா நடிக்க வெளியாகிறது.

இந்த இரு படங்களிலுமே ஸ்ரேயாதான் குத்தாட்டம் போடுகிறார், ஒரு பாடலுக்கு.

இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "ஐட்டம் டான்ஸ் என்பது ஏதோ செய்யக்கூடாத தப்பு மாதிரி எல்லோரும் பார்க்கிறார்கள். எனக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. நடிக்க வந்த பிறகு நாயகியாக இருந்தால் என்ன, ஐட்டம் பாட்டுக்கு ஆடினால் என்ன... எனக்கு எல்லாம் ஒன்றுதான்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, எஸ் ஜே சூர்யா - பவன் கல்யாண்- ஏ ஆர் ரஹ்மான் என ஜாம்பவான்கள் இணைந்துள்ள படம். இதில் ஒரு பாட்டுக்கு தோன்றுவதே கூட பெரிய விஷயம்தான். இந்தப் பாட்டுக்கு நடனம் அமைத்திருப்பவர் என்னுடைய ஃபேவரிட் பிருந்தா மாஸ்டர்... மிகவும் சந்தோஷமாக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன்" என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X