பசுபதியுடன் சிம்ரன்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடிக்கும் குசேலன் படத்தில் இன்னொரு நாயகனாக பசுபதி நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் சிம்ரனைத்தான் இயக்குநர் பி.வாசு அணுகினார்.
ஆனால் குண்டக்க மண்டக்க கண்டிஷன்கள், பெரிய சம்பளம் கேட்டு சிம்ரன் டிமாண்ட் செய்ததால் அவரை கடாசி விட்டு மீனாவை புக் செய்து விட்டனர். இப்போது படமும் முடியப் போகிறது.
இந்த நிலையில் பசுபதி நாயகனாக நடிக்கும் 'த.நா. 07 அழ. 4777' என்கிற புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளாராம்.
ஜிவி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் இந்தியில் நானா படேகர் நடிப்பில் வெளியான டாக்சி என்ற படத்தின் ரீமேக் ஆகும். டாக்சி எண்ணையே இப்படத்தின் தலைப்பாக, அதிலும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைத்துள்ளனர்.
லட்சுமிகாந்தன் என்பவர் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இப்படத்தில் பசுபதி டாக்சி டிரைவராக வருகிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடிக்கவுள்ளார்.
குசேலனில் மறுத்த சிம்ரன் 'த.நா.'வில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டது ஏனோ?


Click it and Unblock the Notifications











