ஷர்மிளாவுடன் நடித்த சோஹா அலிகான்

ஷர்மிளா தாகூர் - மன்சூர் அலிகான் பட்டோடியின் மகள் சோஹாவும், தனது தாயார், அண்ணன் சைப் அலி கான் வரிசையில் நடிகையாக இருக்கிறார்.
சோஹாவும், ஷர்மிளாவும் இணைந்து நடிப்பார்களா என்று ரொம்ப நாளாகவே பாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அது தற்போது நிறைவேறியுள்ளது.
புதுமுக இயக்குநர் சங்கீதா தத்தா இயக்கவுள்ள லைப் கோஸ் ஆன் என்ற படத்தில் ஷர்மிளாவும், சோஹாவும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 29ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
முழுக்க முழுக்க லண்டனிலேயே இதன் படப்பிடிப்பு நடந்தது. கிரீஷ் கர்நாட், ஷர்மிளா தாகூர் ஜோடியாக நடித்துள்ளனர்.
இவர்களின் மகளாக வரும் சோஹா அலிகான், முஸ்லீம் இளைஞரைக் காதலிக்கிறார். இதனால் குடும்பத்தில் பூசல் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.
ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகத்தைத் தழுவி அதை தற்கால நிகழ்வுகளுக்குள் பொருத்தி உருவாக்கியுள்ளனராம் இப்படத்தை.


Click it and Unblock the Notifications











