குரல் கொடுத்த ஸ்ரீதேவிகா..

ஜீவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஞாபகங்கள். இதில் பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்துள்ளார். தாய் காவியம் படத்தைத் தொடர்ந்து விஜய் நாயகனாக நடித்துள்ள படம் இது.
இதில் அவருக்கு ஜோடி சேர்ந்திருப்பவர் ஸ்ரீதேவிகா. இப்படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசியுள்ளார் ஸ்ரீதேவிகா.
படத்தில் அரைகுறை தமிழில் பேசும் பெண் கேரக்டரில் வருகிறார் தேவிகா. நிஜமாகவே ஸ்ரீதேவிகா அரைகுறையான தமிழில்தான் பேசுவார் என்பதால் அவரையே பேசச் சொல்லி விட்டாராம் ஜீவன்.
படத்தில் இந்தியும் இருக்கிறது. ஸ்ரீதேவிகாவும் இந்தி தெரிந்தவர் என்பதால் சரளமாக பேசி நடித்துள்ளாராம்.
படத்தின் நாயகன் என்ற பொறுப்போடு பாடல்களையும் பா. விஜய்யே எழுதியுள்ளாராம்.
Comments
சினிமா சொந்தக் குரல் ஞாபகங்கள் தமிழ் பாவிஜய் ஸ்ரீதேவிகா cinema gyabagangal own voice pavijay sridevika


Click it and Unblock the Notifications