எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

முதல் படத்திலேயே கலக்கலான வேடமாம். அதுகுறித்து சஷான் கூறுகையில், கனிமொழி படத்தின் கதை அருமையானது. எனக்கு தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வம் அதிகம் உண்டு. அந்த சமயத்தில்தான் கனிமொழி பட வாய்ப்பு கிடைத்தது.
ஜெய்யுடன் இதில் கொட்டமடித்துள்ளேன். ஜெய்யுடன் நடித்த அனுபவம் அட்டகாசமானது. செட்டில் நாங்கள் அடித்த கொட்டத்தை யாருமே மறக்க மாட்டார்கள். அது ஒரு இனிய அனுபவம் என்கிறார் சஷான்.
சஷானுக்கு இயல்பிலேயே கூச்ச சுபாவம் அதிகமாம். எனவே சினிமாவுக்கு வருவோம் என்று ஒருபோதும் அவர் நினைத்ததே இல்லையாம். இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை நம்பிக்கையுடன் ஏற்று, கூச்சத்தைக் கட்டுப்படுத்தி அசத்தி வருகிறாராம்.
பாலிவுட்டோடு நிற்காமல், தென்னிந்தியப் படங்கள், ஹாலிவுட் என உயர வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாம். தமிழில் கனிமொழி படத்தில் நடித்துள்ள சஷான், தெலுங்கில் ஆரஞ்ச் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
கனிமொழியை முடித்த கையோடு தற்போது அஜய் தேவ்கனுடன் நடிப்பதற்காக மும்பைக்குத் திரும்பியுள்ளார் சஷான்.


Click it and Unblock the Notifications











