என் மகனை தராவிட்டால் தற்கொலை செய்வேன்! - வனிதா ஆவேசம்

By Chakra

Vanitha
என் மகனை விஜயகுமார் ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆவேசமாகக் கூறினார் நடிகை வனிதா.

விமான நிலைய சண்டை குறித்து வனிதா, விஜயகுமார் இருவரும் போலீஸ் அதிகாரிகளிடமும் பத்திரிகை நிருபர்களிடமும் மாறி மாறி கொட்டித் தீர்த்தனர்.

வனிதா கூறுகையில், தாய்க்குதான் பிள்ளை மீது எல்லா உரிமையும் இருக்கிறது. கோர்ட்டிலேயே இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. விஜயகுமார் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று வெளியே இருக்கிறார். அவரிடம் என் குழந்தை எப்படி போனது என்று புரியவில்லை.

ஆகாஷை தூண்டிவிட்டு குழந்தையை பிரிக்க சதி செய்வது இதன் மூலம் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவை காட்டியும் குழந்தையை போலீசார் என்னிடம் ஒப்படைக்கவில்லை. குழந்தைக்காக சாகவும் நான் தயாராக இருக்கிறேன். அவனை என்னிடம் ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்.

விஜய் ஸ்ரீஹரியை சினிமாவில் நடிக்க வைக்க விஜயகுமார் முயற்சிக்கிறார். நான் அவனை படிக்க வைக்க ஆசைப்படுகிறேன். விஜயகுமார் யாரையும் படிக்க வைக்கமாட்டார். சினிமாவில் விட்டு நிறைய பணம் சம்பாதிப்பதே அவரது நோக்கமாக இருக்கிறது. இது நான் என் சொந்த வாழ்க்கியில், விஜயகுமார் மகளாக புரிந்து கொண்ட உண்மை. அந்த கசப்பான வாழ்க்கை என் மகனுக்கு வேண்டாம்", என்றார்.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், "நான் ஐதராபாத் போய் இருந்தேன். அங்கு ஆகாஷ் என்னை சந்தித்தார். டெல்லிக்குப் போகிறேன். எனது பையன் விஜய் ஸ்ரீஹரியை அவன் பாட்டியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றார். சரி என்று அழைத்து வந்தேன். 15 நாளில் அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதானே கோர்ட் சொல்லியுள்ளது.

பேரனை அழைத்து வந்ததில் எந்த தப்பும் இல்லை. அவனை நான் கடத்தவில்லை.

வனிதா இன்று நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் வேதனைபடுத்தியது. போலீஸ் நிலையத்திலேயே பிரச்சினை செய்தார். தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன வனிதா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்.

அமிதாப் - ரஜினி மாதிரி நிறைய பணம் வைத்திருக்கவில்லை!

பேரன் விஜய் ஸ்ரீஹரி பெயரில் நிறைய கறுப்பு பணத்தை நான் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனால்தான் குழந்தையை விட மறுப்பதாகவும் சொல்கிறார்கள். நிறைய பணம் என்னிடம் கிடையாது. நான் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனோ, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியோ அல்ல. சாதாரண கவுரவ வேஷம் போடும் நடிகன்..," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X