தம்பி மனைவி கொடுத்த வரதட்சணைக் கொடுமைப் புகார்-கைதாகிறார் நடிகை ஆம்னி

By Sudha

Amani
தம்பி மனைவி கொடுத்துள்ள வரதட்சணைப் புகார் எதிரொலியாக முன்னாள் நடிகை ஆம்னியும், அவரது தாயாரும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் படத்தில் கவர்ச்சிகரமாக நடித்தவர் ஆம்னி. கமல்ஹாசனுடன் பாசவலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.

இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர்.

சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ். கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில், எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்.

இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X