விஜய்க்கு 'மாமியாரானார்' ரோஜா!

100 படங்களில் நாயகியாக நடித்து சாதனை படைத்தவர் ரோஜா. ஆனால் இப்போது வாடிய ரோஜாவாகி விட்டதால் அவருக்கு கிடைப்பது மாமியார், அம்மா கேரக்டர்கள்தான்.
ஏற்கனவே பாக்யராஜின் படத்தில் பிருத்விராஜின் அம்மா வேடத்தில் நடித்த ரோஜா இப்போது விஜய்க்கு மாமியாராக காவல்காரன் படத்தில் நடிக்கிறாராம்.
ரோஜாவுக்கு ஜோடியாக நடிப்பது ராஜ்கிரண். அதாவது ஆசினின் அப்பா, அம்மா வேடத்தில் ராஜ்கிரணும், ரோஜாவும் நடிக்கிறார்களாம்.
தொடர்ந்து தமிழில் தீவிரமாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரோஜா. ஆந்திர அரசியல் நிலைமை மகா மோசமாக இருப்பதால் இப்போதைக்கு அங்கு கவனம் செலுத்த வேண்டாம் என ரோஜா முடிவு செய்துள்ளாராம்.
Comments
actress roja காவல்காரன் கோலிவுட் தமிழ் சினிமா நடிகை ரோஜா மாமியார் விஜய் kaavalkaran kollywood mother in law tamil cinema vijay


Click it and Unblock the Notifications