'ஜில் ஜில்' சுப்ரா!

சந்தனச் சிலை போல ஜம்மென்று, நல்ல உயரத்துடன் இருக்கும் சுப்ரா, 2005ம் ஆண்டு தனது 18வது வயதில் போர்டு சூப்பர் மாடல் அழகிப் பட்டத்தை வென்றவர்.
மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தவரைத் தேடி திரைப்பட வாய்ப்புகள் வரவே அதுவும் தெலுங்கிலிருந்து வரவே கப்பென்று பிடித்துக் கொண்டாராம்.
தெலுங்கில், பொம்மரிலு சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்தக் குழுவின் படத்தில்தான் சுப்ரா நடிக்கப் போகிறார். இதனால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்.
உண்மையில் முதலில் சுப்ராவைத் தேடி வந்தது கன்னட பட வாய்ப்புதான். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அவர் மாடலிங்கில் பிசியாக இருந்ததால் யோசித்துள்ளார். அந்த கேப்பில் தயாரிப்பாளர்கள் நமீதாவை புக் செய்து விட்டனர். இதனால் ஏமாற்றத்துக்குள்ளானார் சுப்ரா. ஆனால் தற்போது வலுவான தெலுங்குப் பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் படு குஷியாகியுள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரான சாய் தரம் தேஜுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் சுப்ரா.
இப்படத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து தெலுங்கில் நடிப்பாராம்.
அப்படியே தமிழுக்கும் ஒரு 'எட்டு' வந்துட்டுப் போங்க சுப்ரா!


Click it and Unblock the Notifications











