நடிப்பும், கூடவே படிப்பும்...

அந்தக் காலத்தில் நடிப்புக்காக படிப்பையே விட்டு விட்டு வந்தவர்கள் பலர். அந்தக் கால நடிகர், நடிகைகளில் படித்தவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
சிறு வயதிலேயே நடிக்க வந்த பலரும் பின்னாளில் முழு மூச்சாக நடிப்பிலேயே ஒன்றிப் போய் படிப்பு பக்கமே போகாமல் இருந்தார்கள்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழ். நடிப்போடு, படிப்பையும் ஒரு கண்ணாக நினைப்பவர்கள்தான் அதிகம். குறிப்பாக மலையாளக் கலைஞர்கள் இதில் படு கவனமாக இருக்கிறார்கள்.
நவ்யா நாயர் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படிக்கிறார். இன்னும் சில வாரங்களில் இறுதி செமஸ்டர் எழுதப்போகிறார். படு க்யூட்டாக தினசரி கல்லூரிக்குப் போய் வருகிறாராம். சக மாணவ, மாணவிகளுடன் படு இயல்பாக பழகுகிறாராம். கூடவே பரீட்ச்சைக்காக தீவிரமாக படித்தும் வருகிறாராம்.
நடிகை பானு பள்ளிப் படிப்பை முடிக்கப் போகிறார். இந்த ஆண்டு இன்டர் மீடியேட் தேர்வு எழுதும் பானு, தொலைக் கல்வி மூலம் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கிறாராம்.
நடிகை உதயதாரா பி.பி.ஏ. படிக்கிறார். அது முடிந்ததும் எம்.பி.ஏ. சேரும் உத்தேசமிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











