கவர்ச்சி 'மகாராணி'!

By Sudha

அஞ்சலியின் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக என்று மைக் வைத்து 'மானாங்கணி'யாக கூவாத குறையாக, மகாராஜா படத்தில் அஞ்சலி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கோலிவுட் முழுவதும் கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒப்பந்தமான படம்தான் இந்த மகாராஜா. ஆனால் படம் ரொம்ப காலமாக கிடப்பில் கிடந்தது. இடையில் அங்காடித் தெருவில் அஞ்சலி லைம்லைட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த பல படங்களையும் வேகமாக தூசி தட்டி திரைக்குக் கொண்டு வர கிளம்பினர். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் இந்த மகாராஜா.

இப்படத்தில் அஞ்சலி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே கவர்ச்சிதான் பிரதானம் என்று சொல்லி விட்டார்களாம். இடையில் அங்காடித் தெரு படத்தில் அமர்க்களமான ஹிட்டைக் கொடுத்த அஞ்சலி, கவர்ச்சியாக நடித்தால் தனது இமேஜ் கெட்டுப் போகுமே என்று கூறிப் பார்த்துள்ளாராம். ஆனால் ஒப்புக் கொண்டபடி நடித்தாக வேண்டும் என்று கூறி விட்டனராம்.

இருந்தாலும் படத்தில் அஞ்சலியின் கவர்ச்சி பிரமாதமாக வந்துள்ளதாம். இதனால் கோலிவுட்டில் கவர்ச்சிகரமாக ஒரு ரவுண்டு வருவார் அஞ்சலி என்கிறார்கள்.

படத்தின் நாயகனாக சத்யா நடித்துள்ளார். ஏதோ சாக்லேட்டிலிருந்து வெட்டி எடுத்து இவரை உருவாக்கியிருப்பார்கள் போல, அப்படி ஒரு கொழுக் மொழுக் பையனாக இருக்கிறார். திடீர்னு பார்த்தால் அஜீத் மாதிரியே இருக்கிறார். ரசிக்க காத்திருக்கும் ரசிகைகளுக்கு ஒரு புது ஹீரோ கிடைத்து விட்டார் எனலாம்.

படத்தை இயக்கியிருப்பவர் மசாலாப் பட மாமன்னன் வெங்கடேஷ். படத்தில் நாசருக்கு முக்கியமான பாத்திரமாம். சமீபத்தில்இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X