மும்பையில் செட்டில் - சென்னை வீட்டை விற்கும் ஆசின்

கஜினி மூலம் இந்தியிலும் ஹிட் ஆகி விட்டார் ஆசின். இதைத் தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து மும்பையிலிருந்து இப்போதைக்கு நகர்வதாக இல்லை ஆசின்.
மேலும், தனது குடும்பத்தினரையும் மும்பையில் உள்ள சொந்த வீட்டுக்கு இடம் பெயர வைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள தனது அபார்ட்மென்ட்டை நல்ல விலைக்கு விற்க முடிவு செய்துள்ளாராம் ஆசின்.
கேரளாவில் சொந்த வீடு உள்ளது. மும்பையில் வீடு உள்ளது. இனி தமிழுக்கு வரும் வாய்ப்பில்லை. எனவே எதற்கு தேவையில்லாமல் இங்கு ஒரு வீடு என்று ஆசின் நினைப்பதாக தெரிகிறது.
எனவேதான் தனது சென்னை வீட்டை விற்க முடிவு செய்துள்ளாராம் ஆசின்.
அதுவும் சரிதான்..
Comments


Click it and Unblock the Notifications