வாணிஸ்ரீ, அம்பிகா, பானு..

By Staff

Bhanu
அழகர் மலை படத்தில் ஒரு பாடல் காட்சியில் பானு, அந்தக் காலத்து நாயகிகளான வாணிஸ்ரீ, அம்பிகா போன்ற கெட்டப்களில் வந்து ஆடிப் பாடுகிறாராம்.

தாமிரபரணி பானு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அழகர்மலை மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இடையில் அப்பாவுக்கும், இவருக்கும் பெரும் லடாய் ஆகி, போலீஸ் வரை பஞ்சாயத்துப் போனது நினைவிருக்கலாம். தற்போது அப்பா தொல்லை சற்று ஓய்ந்திருப்பதால் மறுபடியும் நடிக்க ஆர்வத்துடன் களம் இறங்கியுள்ளார்.

எல்லாம் அவன் செயல் பட நாயகன் ஆர்.கே.வுக்கு ஜோடியாக அழகர்மலை படத்தில் நடித்து வருகிறார் பானு. இப்படத்தை தயாரிப்பாவர் சங்கிலி முருகன், இயக்குபவர் எஸ்.பி.ராஜகுமார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது ரீமிக்ஸ், ரீ பிக்ஸ் ஆகியவை வெகு பிரபலம் என்பதால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில், அந்தக்காலத்து நாயகர்கள், நாயகிகள் போன்ற கெட்டப்களில் ஹீரோ, ஹீரோயினை ஆட விட்டுள்ளனர்.

முத்தம்மா முத்தம்மா என்ற பாடலில் ஆர்.கே., எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., பாக்யராஜைப் போலவும், நாயகி பானு, வாணிஸ்ரீ, அம்பிகா போலவும் கெட்டப் மாற்றம் செய்து ஆடுகிறார்களாம்.

அதேபோல முன்னாள் நாயகி சுகன்யா, ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவருடன் ஆடியிருப்பவர் முன்னாள் நாயகன் சரவணன். இதுதவிர இன்னொரு முன்னாள் நாயகனான நெப்போலியன், இப்படத்தில் ஆர்.கே.வின் அண்ணனாக வருகிறார். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் முன்னாள் நாயகி ரஞ்சிதா.

வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X