அசலுக்குப் பிறகு 'அலேக்'

தமிழ் திரையுலகுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர் பாவனா. பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் இருப்பதால் இதுவரை தமிழில் கிளாமர் பக்கம் அவர் போகவே இல்லை.
ஆனால் இதுவே அவருக்கு எதிராகி விட்டது. கிளாமர் புயல்களுக்கு மத்தியில் சிக்கிய சிட்டுக் குருவி நிலையாகி விட்டது பாவனாவின் கதை. விளைவு கையில் படம் இல்லாத நிலை - அசல் படத்தைத் தவிர.
அசல் படத்துக்குப் பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை மனதில் வைத்துள்ளாராம் பாவனா.
அதில் முதலாவது கிளாமர் களத்தில் குதிப்பது. பெரிய அளவில் கேரக்டருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடாத வகையில் கிளாமராக நடிக்கப் போகிறாராம். அதேபோல முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே இனி நடிப்பாராம். செகன்ட் ரேங்க் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டாராம்.
இந்த முக்கிய முடிவுகளை எல்லாம் அசல் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் அமல்படுத்த பாவனா திட்டமிட்டிருப்பதாக காதுக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











