ஹாலிவுட் படத்தில் நடிக்கும் 'சக் தே இந்தியா' ஷில்பா!

By Staff

Shilpa Shukla
ஷாருக்கான் ஹாக்கி பயிற்சியாளராக நடித்த சக் தே இந்தியா படத்தில் நடித்த ஷில்பா சுக்லா, ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

சக் தே இந்தியா படத்தில் நடித்தவர் ஷில்பா சுக்லா. பிந்தியா நாயக் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தலைக்கனம் பிடித்த பெண்ணாக அவர் நடித்த நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. இந்த நிலையில் இப்போது "எக்ஸ்ட்ரோஸ்பெக்ஷன்" என்ற ஆங்கிலப் படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சாரு என்ற கேரக்டரில் ஷில்பா நடிக்கிறார்.

இப்படத்ைத மனன் சிங் கோடஹோரா தயாரித்து, இயக்கவுள்ளார். இவர் லெஸ்பியன் உறவை மையமாகவைத்து இயக்கியுள்ள வென் கிரண் மெட் கரண் என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து தனது புதிய படத்தைத் தொடங்குகிறார் மனன் சிங்.

சத்யஜித் ரேயின் கதாபாத்திரமான சாருலதாவின் பெயரைத்தான் தனது படத்தின் நாயகிக்கு சூட்டியுள்ளார் மனன் சிங். நியூயார்க் நகரில் வசிக்கும் பெண்ணாக இப்படத்தில் ஷில்பா வருகிறார். விரைவில் படப்பிடிப்பு நியூயார்க்கில் தொடங்குகிறது.

ஷில்பா முதன் முதலில் நடித்தது பாகிஸ்தான் படமான காமோஷ் பானியில்தான். அதில் கிரண் கர் உடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் சக்தே படம்தான் ஷில்பாவுக்கு பெயர் கொடுத்தது. இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X