சேரனுக்கு கோபிகா நோ..நோ!

By Staff

Udhayatara
ஆட்டோகிராப் 2ம் பாகத்தை எடுக்கவிருக்கும் சேரன், அதில் கோபிகா நடித்த கேரக்டரில் நடிக்க உதயதாராவை அணுகியுள்ளாராம்.

ஆட்டோகிராப் மூலம் ஹீரோவா அவதாரம் எடுத்தவர் சேரன். அதில் அவரது நடிப்பு மட்டுமன்றி கதையும், கோபிகா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில் ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் சேரன். இதில் ஸ்னேகா, மல்லிகா ஆகியோர் கேரக்டர்களில் அவர்களே நடிக்கவுள்ளனர். ஆனால் கோபிகாதான், 2ம் பாகத்தில்நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

கல்யாணமாகப் போவதை காரணம் காட்டி நடிக்க மறுத்து விட்டாராம் கோபிகா. பலமுறை சேரன் கோரியும் கூட கோபிகா தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம்.

இதையடுத்து தற்போது உதயதாராவை அணுகியுள்ளாராம் சேரன். கோபிகாவைப் போலவே முகவாகு உதயதாராவுக்கு. எனவேதான் அவரை தேர்வு செய்துள்ளாராம் சேரன்.

உதயதாரா தரப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லையாம். ஆனால் நெகட்டிவ் சிக்னல் எதுவும் இதுவரை வராததால், கண்டிப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையில் சேரன் உள்ளார்.

2ம் பாகத்தின் கதை ரெடியாகி விட்டதாம். உதயதாராவும் ஒப்புக் கொண்டு விட்டால் ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம் சேரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X