தீபா சாரியின் பலம்!

பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தின் நாயகன் அரவிந்த் வினோத்.
வேலையில்லாத ஒரு இளைஞன், பந்தயம் என்ற விஷயத்தையே தன் பொழுதுபோக்காகக் கொள்கிறான். அவனுக்கு அந்தப் பந்தயமே வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைகிறது. அந்தப் பந்தயத்தின் விளைவுகள்தான் இந்தப் படமாம்.
இந்தப் படத்துக்குப் பொருத்தமான, கிளாமரான நாயகி வேண்டும் என்று தேடியபோதுதான் தீபா சாரியின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார்கள். கபூத்தர் எனும் இந்திப் படத்தில் நடித்துள்ள தீபா, பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
கிளாமருக்கு எல்லையெல்லாம் கிடையாது. ஒருவரை முகம் சுளிக்காத அளவு கிளாமரில் கலக்குவேன். மற்றபடி கேரக்டர் ரோல்களிலும் நடிப்பேன் என்கிறார் தீபா சாரி.
பிழைக்கத் தெரிஞ்ச சாரி!
Comments


Click it and Unblock the Notifications