வேளாங்கண்ணி: ரசிகர்களிடம் சிக்கிய கோபிகா!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் தனது நன்றி அறிவிப்புப் பிரார்த்தனையைச் செலுத்திய அவரைக் காண முண்டியடித்தது கூட்டம்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களின் நெரிசலில் சிக்கிக் கொண்ட கோபிகாவை வேளாங்கண்ணி போலீசார் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
வேளாங்கண்ணி விசிட் குறித்து கோபிகாவிடம் கேட்டபோது, மிகுந்த மனநிறைவைத் தந்த பயணம் இதுதான். திருமணமானதும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவுக்கு என் நன்றி காணிக்கையைச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அதை உடனே நிறைவேற்றத்தான் வந்தேன்.
இங்கு கூடிய ரசிகர் கூட்டம் நானே எதிர்பார்க்காதது. மனசுக்குள் ஒரு ஓரத்தில் சின்ன வருத்தமாகக் கூட இருந்தது. இவ்வளவு ரசிகர்களை எனக்குத் தந்தது சினிமாதானே... என் கணவர் பிரமித்துப் போய்விட்டார் இந்தக் கூட்டத்தைப் பார்த்து. இந்தியாவில் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமா உனக்கு என வியந்து போய் கேட்டார்.
நடிக்க வராமலிருந்திருந்தால், நானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானிருந்திருப்பேன். இப்படி ஒரு புகழைத் தந்த சினிமாவுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் கோபிகா.
தேனிலவுக்காக ஐஸ்லாந்து செல்லும் முன் இங்குள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு கணவரோடு ஒரு விசிட் போய்வரத் திட்டமிட்டுள்ளார் கோபிகா.
கோடம்பாக்கத்துக்கும் வருவீங்களா...?


Click it and Unblock the Notifications











