'ஹனிமூன்'-வித்தியாச கோபிகா!

கல்யாண சீசன் முடிந்து விட்டது. அடுத்து ஹனிமூன் சீசன். கோபிகாவும், அவரது கணவர் டாக்டர் அஜிலேஷும் மூணாரில் ஹனிமூனைக் கொண்டாடியுள்ளனர்.
மூணாறில் இருவரையும் பார்த்த சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், போஸ் கொடுக்குமாறு கூறவே சந்தோஷமாக கணவருடன் போஸ் கொடுத்துள்ளார் கோபிகா.
கணவரின் அன்புப் பிடியில் கோபிகா படு சந்தோஷமாக காணப்படுகிறார் அந்தப் படங்களில்.
கல்யாணப் படங்களுடன் நின்று விடும் ஹீரோயின்களுக்கு மத்தியில் தனது கணவருடன் கேஷுவலாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ள கோபிகா நிச்சயமாக வித்தியாசமானவர்தான்.
Comments


Click it and Unblock the Notifications