இடுப்பு பெருத்துருச்சே...!

By Staff

Kadhal Saranya
காதல் பட 2வது நாயகி சரண்யாவுக்கு திடீரென உடம்பு பெருத்துப் போய் குண்டடித்து விட்டாராம். இதனால் அவரை விட அவரது தாயார்தான் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்.

காதல் படத்தில் நாயகி சந்தியாவின் இடத்தில் நடித்திருக்க வேண்டியவர் சரண்யா. ஆனால் முகம் முதிர்ச்சியாக இருந்ததால் அவருக்குப் பதில் சந்தியாவை நாயகியாக்கினர். இருந்தாலும் சரண்யாவை ஏமாற்ற மனம் இல்லாமல், சந்தியாவின் தோழி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தனர்.

சமீபத்தில் சரண்யாவும் நாயகியாகினார். ஒரு தமிழ்ப் படத்திலும், தெலுங்குப் படத்திலும் தனி நாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் தற்போது அவரது கைவசம் சுத்தமாக எந்தப் படமும் இல்லையாம். படிக்கப் போய் விட்டாரோ என்று விசாரித்துப் பார்த்தால் அப்படியும் இல்லை. ஆனாலும் பட வாய்ப்பு வராமல் போனதற்குக் காரணம், திடீரென பெருத்துப் போன அவரது உடல்தானாம்.

உடல் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அடிக்கடி நைட் பார்ட்டி, டிஸ்கோ என கிளம்பிப் போய் வந்தாராம் சரண்யா. கண்டபடி சாப்பிட்டதால் இப்போது இடுப்பு எங்கு இருக்கிறது என்பதைக் கூட கண்டறிய முடியாத அளவுக்கு உடம்பு வெயிட் போட்டு விட்டதாம்.

இதனால் அவரைத் தேடி வந்த சில படங்களும் கூட திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போய் விட்டனவாம். இதுகுறித்து சரண்யா பெரிய அளவில் கவலைப்படாமல் இருக்கிறாராம். ஆனால் அவரது தாயாருக்குத்தான் ரொம்பக் கவலையாக இருக்கிறதாம்.

தாய்க்குலம்தானே கவலைப்பட்டாக வேண்டும்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X