பந்தா காஜல்- சான்ஸ் புஸ்!

பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான காஜல் அகர்வால், பழனி படம் மூலம் பேரரசுவின் குட்டுப்பட்டு, பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் ஆனதால் காஜலும் ஆட்டோமேட்டிக்காக ராசி நாயகிகள் பட்டியலில் சேர்ந்தார்.
இதையடுத்து அவரைத் தேடி பல படாதிபர்களும், இயக்குநர்களும் ஓடினர். சில ஹீரோக்களும் கூட காஜலை பாருங்களேன் என்று தங்களது தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் ரெக்கமன்ட் செய்யும் அளவுக்கு ஆர்வமாக இருந்தார்கள்.
இதையடுத்து காஜலைத் தேடி பலரும் படையெடுத்தனர். அங்கேதான் விதி வந்து விழுந்து விழுந்து சிரித்தது. தேடி வந்த தயாரிப்பாளர்களிடம் ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட ஆரம்பித்தார் காஜல். கூடவே சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க கேட்டு தயாரிப்பாளர்களை திகிலடைய வைத்தார்.
ஒரு படம்தான் நடித்திருக்கிறார். இப்பவே இப்படியா என்று பயந்து போன தயாரிப்பாளர்கள் போன வேகத்தில் பேக்கப் ஆகி விட்டனர். விளைவு, காஜல் கையில் இப்போது ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையாம்.
அடப்பாவமே!


Click it and Unblock the Notifications











