twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்க்கையை ஈஸியாக நினைத்தால் ஈஸி, கஷ்டமாக நினைத்தால் கஷ்டம்-குஷ்பு

    By Sudha
    |

    Kushboo
    வாழ்க்கையை ஈஸியாக நினைத்தால் அது ஈஸியாக இருக்கும். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டமாகவே இருக்கும் என்று கூறினார் நடிகை குஷ்பு.

    கோவையை அடுத்துள்ள சரவணம்பட்டியில் கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவன வளாகத்தில் வணிக மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான தென்னிந்திய அளவிலான கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்டார் நடிகை குஷ்பு.

    அப்போது அவர் பேசுகையில், வாழ்க்கையில் நிறைய தடவை, இதுக்கு அப்புறம் முன்னேற முடியாது என்று நினைக்க தோன்றும். இதற்கு அப்புறமும் முயற்சி தேவையா? என்று எண்ணத்தோன்றும். இருந்தாலும் முயற்சியை கைவிடக்கூடாது.

    உங்களை நான் தப்பு செய்யாதீங்க என்று சொல்லமாட்டேன். தப்பு செய்யும்போதுதான் இது தப்பு என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதை உணர்ந்தபின் மீண்டும் தப்பு செய்யக்கூடாது. அது தான் உங்கள் புத்திசாலித்தனம்.

    நானும் ஒரு தப்பு செய்தேன். அப்போது எனக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் பண்ணி கடவுள் என்று நினைத்த காலம். அந்த நேரத்தில் தான் அந்த சின்ன தப்பை செய்தேன். என்ன தப்பு என்று கேட்டு விடாதீர்கள்.

    அந்த காலகட்டத்தில் தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு 5 படங்களில் தொடர்ந்து நடிக்க கால்ஷீட் கொடுத்து இருந்தேன். ஆனால் நான் செய்த அந்த சின்ன தப்பு காரணமாக ஒரேநாளில் அந்த 5 படங்களில் இருந்தும் என்னை தூக்கி விட்டார்கள். அதற்கு அப்புறம் எனக்கு ஒன்றரை ஆண்டு வேலையே இல்லை.

    அப்போது நான் என்ன செய்தேன்? என்ன செய்து இருப்பேன் என்பதுதான் முக்கியம். அப்போது நான் அழுவதா? சிரிப்பதா? அல்லது பயந்து போய் ஓரமாக உட்காருவதா? என்று இருக்கவில்லை.

    வீட்டில் சமையல் கற்றுக்கொண்டேன். அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்துப் போட்டேன். அந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் தான் உணர்ந்தேன். வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், பணம் சம்பாதித்தாலும் நமக்கு தேவை நிம்மதி என்று.

    நான் செய்த தப்பை, நான்தான் சரிபடுத்த முடியும் என்று மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். எந்த தயாரிப்பாளர்கள் அப்போது என்னை படத்தில் இருந்து தூக்கினார்களோ, அந்த தயாரிப்பாளர்கள் மீண்டும் என்னை படத்தில் நடிக்க கியூவில் நின்று புக் பண்ணினார்கள். ஆகவே வாழ்க்கை என்பது ஒரு சைக்கிள் போன்றது. அது நம் கையில்தான் உள்ளது. தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்.

    நான் ஒரு பட்டப்படிப்பை படித்துக்கொண்டு உங்கள் முன்வந்து பேசவில்லை. வெறும் 9-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை. பள்ளிப்படிப்பை தொடர முடியாதது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

    நான் படிக்காதவளாக இருந்தாலும், ஒருவேளை முன்னேறவில்லை என்றால் என்ன பண்ணி இருப்பேன்? நான் கடினமாக உழைத்து முன்னேறி இருக்கிறேன். ஆனால் இது எல்லோராலும் முடியுமா? ஆகவே கல்வி என்பது முக்கியம். ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும்.

    என்னுடைய முதல் படம் தர்மத்தின் தலைவன். அந்த படத்திற்கு ஷூட்டிங் போகும்போது எனக்கு தமிழ் தெரியாது. என்னுடன் யூனிட்டில் இருந்தவர்கள் ரஜினி சார் வரும்போது, தமிழில் பேச சொன்னார்கள். நானும் முயற்சி செய்து பேசினேன். நான் பேசிய வார்த்தையை கேட்டு யூனிட்டில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

    அதை கேட்ட ரஜினி சார் சிரித்தபடி வந்து என்னை தட்டிக்கொடுத்தார். கல்லூரி போகும் போது ஏற்படும் ராக்கிங் அனுபவம் எனக்கு அப்போது கிடைத்தது. வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கும். ரொம்ப ஈஸி என்று நினைத்தால் அது ஈஸியாகத்தான் இருக்கும் என்றார் குஷ்பு.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X