twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி... - சிம்ரன் வருத்தம்

    By Staff
    |

    Simran
    ரஜினி காந்த் படத்தில் நடிக்க இரு முறை வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருவதாக சிம்ரன் கூறியுள்ளார்.

    சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். சில காட்சிகளிலும் நடித்தார். ஆனால் திடீரென கர்ப்பமாக இருப்பதாக கூறி விலகிக் கொண்டார். இதனால் ஜோதிகா அந்த வேடத்தில் நடித்து அசத்தி விட்டார்.

    இந்த நிலையில் ரஜினியின் குசேலன் படத்திலும் சிம்ரனுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த முறை பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் சிம்ரன்.

    இருப்பினும் டிவியில் பிசியாகி விட்டதால்தான் அந்த வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார் சிம்ரன்.

    தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சிம்ரன் திரையில் நாயகியாக நடிக்கிறார் சிம்ரன். அதுபோல சன் டிவியிலும் ஒரு ஷோ கொடுக்கவுள்ளார்.

    சிம்ரன் திரை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது சிம்ரன் விலாவாரியாக பேசினார். குசேலன் பட வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, குசேலன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் டிவியில் நான் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து விட்டதால் நடிக்க முடியாமல் போய் விட்டது.

    சந்திரமுகியிலும் நடிக்க முடியாமல் போனது. இப்போது குசேலனிலும் வாய்ப்பு நழுவி விட்டது. இது எனக்கு வருத்தம்தான் என்றார் சிம்ரன்.

    தனக்குப் பிறகு வந்துள்ள பல நடிகைகள் சிறப்பாக நடிப்பதாக பகிரங்கமாக பாராட்டுகிறார் சிம்ரன். குறிப்பாக மொழியில் ஜோதிகாவும், பருத்தி வீரனில் பிரியா மணியும், கஜினியில் ஆசினும், சிவாஜியில் ஷ்ரியாவும், பில்லாவில் நயனதாராவும் அசத்தி விட்டதாக கூறுகிறார்.

    தொடர்ந்து கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறீர்களே என்று கேட்டால், அதில் என்ன தவறு. இந்தியில் திருமணமான பல நடிகைகள் நாயகிகளாக நடிக்கின்றனர். கல்யாணமானால் கிளாமர் போய் விடும் என்பது தவறு. எனக்கு இப்போது வயது 32 தான் ஆகிறது. இந்த நிலையில் எப்படி வயதான வேடங்களில் நடிக்க முடியும் என்று எதிர் கேள்வி போடுகிறார்.

    சிம்ரன் தொடர்ந்து நடிப்பதற்கு அவரது கணவர் வீட்டார் முழு ஆதரவு தருகிறார்களாம். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்து உடையவர்களாம் மாமனார் வீட்டார் என்கிறார் பெருமையாக.

    சரி அதிமுகவுக்காக பிரசாரம் செய்தீர்கள். அதன் பிறகு விட்டு வீட்டீர்கள். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் எதிர்காலத்தில் நடப்பதை யார் அறிவார் என்று புதிர் போடுகிறார்.

    பிரமீட் சாய்மீரா நிறுவனத்தின் தயாரிப்பான சிம்ரன் திரையில் ஒரு மாதத்திற்கு ஒரு கதை என மொத்தம் 12 கதைகளாக ஒரு வருடத்திற்கு இந்த சிம்ரன் சின்னத் திரை ஒளிபரப்பாகவுள்ளது.

    12 கதைகளிலும் சிம்ரன்தான் நாயகி. முதல் மாத தொடராக மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி என்ற கதை ஒளிபரப்பாகவுள்ளது. இந்தக் கதையை இயக்கியிருப்பவர் ஸ்ரீபிரியா.

    அடுத்த மாத கதையை அகத்தியன் இயக்குகிறார். தொடருக்கான டைட்டில் பாடலை வைரமுத்து எழுத ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். சின்மயி பாடியுள்ளார்.

    மார்ச் 3ம் தேதி முதல் தினசரி இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X